மணல் கடத்தலை தடுத்த பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்-7 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே மணல் கடத்தலை தடுத்த மகளிர் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் பணியாற்றி வருபவர் ஸ்டெல்லா பாய்.
இவர் அதிகாலை நேரத்தில் பாத்திமாநகர் பகுதியில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மணல் லாரிகளை நிறுத்தினார்.
லாரிக்கு முன்பு மேக்காடு- பாத்திமாநகர் சாலையில் ஒரு காரில் 7 பேர் வந்தனர். அவர்கள்,லாரியை பறிமுதல் செய்தால், ஸ்டெல்லா பாயை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இது குறித்து ஸ்டெல்லா பாய், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஜெயசுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். ஸ்டெல்லா பாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திக்குறிச்சி செல்வகுமார் (30), தேவதாஸ் (38), ரெஜிலால் (30), ரவிகுமார் (28), பாகோடு டார்வின் ஆன்டனி (29), பாலகிருஷ்ணன் (36), செல்லம் (40) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், 2 மணல் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications