சிமென்ட் நிறுவனங்களுக்கு அரசு கோரிக்கை
சென்னை: சிமென்ட் நிறுவனங்கள் தங்களிடம் தேங்கியிருக்கும் கழிவு பொருட்களை மறுசுழற்சியின் மூலம் ஆற்றல் மூலங்களாக மாற்றி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன் கான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சிமென்ட் ஆலைகளில் கழிவு பொருள் நீக்கம் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதை மைதீன் கான் துவக்கி வைத்து பேசுகையில்,
சிமென்ட் தொழிற்சாலைகள் தங்களிடம் இருக்கும் அபாயகரமான கழிவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக அதன்மூலம் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆற்றல் மூலங்களை தயாரிக்க முன்வர வேண்டும்.
இந்த கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயராக இருக்கிறது.
இந்த வாரியம், தமிழக அரசுடன் இணைந்து கும்மிடிப்பூண்டியில் ஒரு தொழிற்சாலை துவக்க இருக்கிறது. இங்கு கழிவு பொருட்கள் ஆவியாக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும்.
தமிழகத்தில் தற்போது இருக்கும் 2,655 தொழிற்சாலைகள் ஒரு ஆண்டுக்கு 3.14 லட்சம் டன் கழிவை உருவாக்கி வருகின்றன. அதேபோல் நாடு முழுவதும் தினமும் 40 முதல் 50 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கூடுதலாக மண்ணில் புதைக்கப்படுகிறது.
தற்போது ஒரு நிறுவனம் இந்த கழிவுகளை மறுசுழற்சியின் மூலம் ஆற்றல் சக்திகளாக மாற்ற முன் வந்துள்ளது. சுற்றுப்புறு சூழலை காக்கும் இது போன்ற நடவடிக்கைகள் வரவேற்படுகின்றன என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications