விநாயகர் சதுர்த்தி-தாக்குதலுக்கு லஷ்கர் திட்டம்
டெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தாக்குதல் நடத்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி யூசுப் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது இந்த சதித் திட்டம் குறித்த விவரம் தெரியவந்தது.
டெல்லியிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகருக்குச் செல்ல ரயில் ஏற காத்திருந்தபோது யூசுப் பிடிபட்டார். அவரிடமிருந்து ஏராளமான வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அவர் பலமுறை சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் நடத்த அவர் அனுப்பி வைக்கப்பட்டாரா அல்லது வெடிப்பொருள்களை யாரிடமாவது கொடுக்க அனுப்பி வைக்கப்பட்டாரா என்று விசாரணை நடக்கிறது. நான்டெட் நகரிலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்தத் தகவலையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு உயர் மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications