கருணாநிதிக்கு பாரதரத்னா-புதுச்சேரி சட்டசபையில் அமளி
புதுச்சேரி: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா தரப்பட வேண்டும் என்று திமுக சார்பில் புதுச்சேரி சட்டசபையில் திமுக கோரிக்கை வைத்தது. இதைக் கடுமையாக கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று பேசிய திமுக உறுப்பினர்கள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாரதரத்னா தர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.
இதையடுத்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் இதைக் கடுமையாக ஆட்சேபித்து குரல் கொடுத்தனர். பதிலுக்கு திமுக எம்.எல்.ஏக்களும் பேசியதால் சபையில் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் உள்ளே வந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே புகுந்து அதிமுக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு போய் விட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications