உரிமம் இல்லா லிப்டுகள்-கட்டடங்களுக்கு நோட்டீஸ்
சென்னை: உரிய உரிமங்கள் இல்லாமல் கட்டடங்களில் லிப்ட் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கட்டட உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஆய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை நகரில் 1000 லிப்டுகள் முறையான உரிமம் இல்லாமல் இருப்பதாக கண்டுபிடித்துள்ளோம். இவற்றுக்கு முன்பு உரிமம் பெறப்பட்டிருந்தது. ஆனால் அவை காலாவதியாகி விட்டன. அவற்றை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர்.
500 லிப்டுகள் எந்தவித உரிமமும் பெறாமல் பொருத்தப்பட்டுள்ளன. உரிமம் பெறாத லிப்ட்டுகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை இதுவரை இல்லாத அளவு வேகமாக்கப்பட்டுள்ளது.
கே.கே.நகர், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 கட்டடங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளோம்.
தமிழ்நாடு மின்தூக்கிகள் சட்டம் 1997ன் கீழ் இன்னும் 2 மாதங்களுக்குள் முறையான உரிமங்களைப் பெற வேண்டும் என கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் உரிம் பெற்று 7000 லிப்ட்டுகள் செயல்பாட்டில் உள்ளன. 30 முதல் 40 சதவீதம் வரையிலான லிப்டுகளுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மின் தூக்கிகள் சட்டம் 1997ன் கீழ் உரிமம் பெறாமல் லிப்ட் வைத்திருந்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து உரிமம் பெறாமல் பயன்படுத்தி வந்தால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 50 அபராதமாக வசூலிக்கப்படும் என்றார் அவர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications