கனடா, மியான்மரிலிருந்து 10,000 டன் துவரம் பருப்பு இறக்குமதி - அமைச்சர்
சென்னை: கனடா மற்றும் மியான்மரிலிருந்து 10 டன் துவரம் பருப்பை தமிழக அரசு இறக்குமதி செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளி மார்க்கெட்டில் கிடைப்பதை விட ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விலைக் குறைவாக இருப்பதால் மக்கள் பெருமளவில் அதை நாடுகின்றனர். இதனால் துவரம் பருப்புக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க துவரம் பருப்பை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தற்போது துவரம் பருப்பு கிலோ ரூ. 32க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே வெளிமார்க்கெட்டில் ரூ. 80க்கு விற்கப்படுகிறது.
2007ம் ஆண்டு ரேஷன் கடைகளஅ மூலம் துவரம் பருப்பை விற்க அரசு முடிவு செய்தது. அப்போது வெளி மார்க்கெட்டில் ஓரளவே விலை அதிகமாக இருந்தாதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பெரிய அளவில் கிராக்கி இல்லை.
ஆனால் தற்போது வெளிமார்க்கெட்டில் துவரம் பருப்பின் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளில் விற்கப்படும் துவரம் பருப்பை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்னர். இவர்களில் 1.75 கோடி பேர் ரேஷன் கடைகளிலேயே மளிகைப் பொருட்களை வாங்குகின்றனர்.
ரேஷன் கடைகளில் விற்கப்படும் துவரம் பருப்பை சிலர் வெளிமார்க்கெட்டுக்கு கள்ளத்தனமாக விற்பதாக புகார்கள் வருகின்றன. இதைத் தடுக்கவும், பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் புகார்களைப் பெறவும் அடுத்த மாதம் ஹெல்ப்லைன் வசதி செய்யப்படவுள்ளது. கிட்டத்தட்ட 400 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளையும் இதுவரை நடத்தியுள்ளனர் என்றார் வேலு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications