சமூக நலத்துறையில் லஞ்சம்-3 பேர் சிக்கினர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.29 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் டூவிபுரத்தில் உள்ளது. சமீபத்தில் ஆழ்வார்திருநகரி பகுதிகளில் இருந்துமூவாலூர் ராமமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவர்கள் இங்கு வந்து அதை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆழ்வார்திருநகரி, தென்பொறை, குலசேகரம்பட்டிணம் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் வேன்களில் வந்தனர்.
அவர்களிடம் சமூக நலத்துறை அலுவலகத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஊர்நல அலுவலர்கள் புஷ்பா, பாப்பாத்தி, மற்றும் அலுவலக உதவியாளர் சுடலைமணி ஆகியோர் அவர்களிடம் நலத்திட்ட உதவித் தொகைக்கான செக் விரைவில் வழங்கப்படும். இதற்காக அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக ரூ.500 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பயனாளிகள் 70 பேர் தலா ரூ. 500 கொடுத்துள்ளனர். மேலும் அவர்களை வேன்களில் அழைத்து வருவதற்காக தலா ரூ.60 வசூலித்துள்ளனர்.
இதுகுறித்து ரகசிய தகவலறிந்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தங்கசாமி, இன்ஸ்பெக்டர்கள் எடிசன், ராஜ் ஆகியோர் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் புஷ்பா, பாப்பாத்தி மற்றும் சுடலைமணி ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.29 ஆயிரத்து 350 பறிமுதல் செய்தனர். அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து்ள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications