ஹைதராபாத்தில் கொடி கட்டிப் பறக்கும் விபச்சாரம்
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் சமீபகாலமாக விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. அங்கு கடந்த இரண்டு ஆண்டில் விபச்சார அழகிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சி தகவலை ஆந்திர மாநில ஏய்ட்ஸ் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியி்ட்டுள்ள செய்திக் குறிப்பில்,
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் வயது, அழகு மற்றும் வாடிக்கையாளர்களின் வசதி ஆகியவற்றை வைத்து ரூ. 500 முதல் 5 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.
நிதி நெருக்கடியால் உலகமே தவித்து வருமே நிலையில் எந்த சிக்கலும் இல்லாமல் செழிப்பாக நடந்து வரும் ஒரே தொழில் செக்ஸ் தொழில் தான் என்கிறது அந்த அமைப்பு.
5 ஆயிரம் விபச்சார அழகிகள்...
ஹைதராபாத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் நலவாழ்வு அறக்கட்டளை ஒன்றை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
தற்போது ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரில் சுமார் 5 ஆயிரம் விபச்சார அழகிகள் தங்கி இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் நகரில் உள்ள குடியிருப்பு அபார்மென்ட்களில் தங்கியிருக்கின்றனர். இவர்கள் தற்போது மும்பை விபச்சார அழகிகளை போல ஒரு பெண் புரோக்கருடன் தங்கி தொழில் செய்து வருகின்றனர் என்றார்.
ஒரு நாளைக்கு ரூ. 23 ஆயிரம்...
ஒரு செக்ஸ் தொழிலாளி கூறுகையில், குகாபலி என்ற பகுதியில் வசிக்கும் 25 வயதான பெண் புரோக்கருடன் 10 நாட்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இங்கு என்னை போல் நான்கு பெண்கள் இருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு குடும்பத்தினரை போல் தெரிவோம்.
எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை அந்த புரோக்கர் பெண்ணுக்கு கொடுத்து விடுவோம். தற்போது ஒரு நாளைக்கு 10 வாடிக்கையாளர்கள் என ரூ. 23 ஆயிரம் சம்பாதிக்கிறேன். இதை பயன்படுத்தி தனியாக ஒரு நிறுவனம் துவக்கி வியாபாரம் செய்து வருகிறேன்.
தற்போது 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தான் ஏக கிராக்கி. எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையானோர் திருமணம் முடிந்தவர்கள். அவர்களில் வியாபாரிகள், தகவல் தொழில்நுட்ப என்ஜினியர்கள், ஆட்டோக்காரர்கள் என அனைத்து ரகத்திலும் உண்டு என்றார்.
யூசுப்குடா பகுதியில் இருக்கும் ஒரு பெண் புரோக்கர் கூறுகையில்,
மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற ஊர்களில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆந்திராவில் நல்குன்டா, வாரங்கால் பகுதிகளில் இருந்து பெண்கள் அதிகம் வருகின்றனர். கடந்த 5 ஆண்டாக இந்த தொழில் தான் செய்து வருகிறேன் என்றார்.
ஜாமீனில் வந்துவிடுகின்றனர்...
இது குறித்து ஆந்திராவின் மேற்கு பகுதி துணை போலீஸ் கமிஷ்னர் ரவி வர்மா கூறுகையில்,
ஏழை பெண்களுக்கு ரூ. 40 ஆயிரத்துக்கு மேல் தருகிறேன் என ஆசை வார்த்தை காட்டி அழைத்து வருகின்றனர். அவர்களை நாங்கள் எத்தனை முறை கைது செய்தாலும், ஜாமீனில் வெளிவந்து வேறு இடத்தில் தொழிலை துவக்கி விடுகின்றனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications