புகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழிக்க முயன்ற ஏட்டு சஸ்பெண்ட்!
நெல்லை: நெல்லை அருகே புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார். அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டனை சேர்ந்தவர் ரதி. திருமணமானவர். இரு குழந்தைகள் உள்ளது. இவர் ஒரு பிரச்சனை தொடர்பாக கடந்த 19ம் தேதி கங்கைகொண்டான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த ஏட்டு ராஜாரவியிடம் மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட ராஜாரவி தனது வீட்டிற்கு ஒரு மணி நேரம் கழித்து வந்தால் வழக்கு் சம்பந்தமான விவரங்களை கூறுவதாக ரதியிடம் கூறினார். இதனை நம்பிய ரதியும் ஏட்டு வீட்டிற்கு சென்றார்.
அப்போது ராஜாரவி ரதியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த ரதி, அவரது பிடியில் இருந்து போராடி தப்பினார்.
அதன் பின்னர் மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கை அணுகி புகார் செய்தார். இதையடுத்து ரதியிடமும், கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்திலும் எஸ்பி விசாரணை நடத்தினார்.
அவரது உத்தரவின் பேரில் நேற்று இரவு ஏட்டு ராஜாரவி மீது கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுபோல் பெண்களிடம் வரம்பு மீறி நடக்கும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எஸ்பி எச்சரி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications