தீராத நோய் உள்ளவர்கள் ஹஜ் யாத்திரையை தவிர்க்க வேண்டும் - ஹஜ் கமிட்டி
மதுரை: தீராத, நாள்பட்ட நோய் உள்ளவர்கள் ஹஜ் யாத்திரையைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியா செல்லவிருக்கும் சமயங்களில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பயணிகளை சவூதி அரேபிய அரசு தடை செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இது தொடர்பாக, மத்திய ஹஜ் குழுவிடம் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு எடுத்துரைத்து தெளிவுரைகள் கோரியது. ஹஜ்- 2009 ம் ஆண்டு யாத்திரைக்காக வயது, பாலினம் குறித்து எவ்வித தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று சவூதி அரேபிய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.
மேலும், இந்த ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பருவகால ப்ளு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் (எச்1என்1 ப்ளு) ஆகியவற்றுக்கான தடுப்பூசி மருந்து போட்டதற்கான சான்றிதழை ஹஜ் விசா பெறுவதற்கு இரண்டு வாரம் முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.
நாள்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த ஆண்டில் தங்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை பாதுகாப்பை கருத்தில் கொண்டு தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications