ஜம்மு காஷ்மீர் சட்டசபை அருகில் தாக்குதல்-2 ராணுவத்தினர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை அருகே இன்று தீவிரவாதிகள் கையெறி குண்டு மற்றும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 8 பேர் படுகாயமைடைந்தனர்.
ஸ்ரீநகரில் உள்ள லால் செளவுக் பகுதியில் இருந்து பட்மலு பகுதிக்கு செல்லும் வழியில் மாநில சட்டசபை உள்ளது. இதற்கு அருகில் தான் தலைமை செயலகம், காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 28வது பட்டாலியனை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இந்த தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு தீவிரவாத கும்பல் ஜம்மு காஷ்மீர் தீயணைப்பு பிரிவின் தலைமையகத்துக்கு முன்னாள் ரோந்து போய் கொண்டிருந்த சிஆர்பிஎப் படையினர் மீது குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
இது இம்மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது துயர சம்பவம். இம்மாதம் 1ம் தேதி தீவிரவாதிகள் சிஆர்பிஎப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications