கருணாநிதியை சந்தித்தார் இல.கணேசன்- கைதிகளை விடுவிக்க கோரிக்கை
சென்னை: முதல்வர் கருணாநிதியை இன்று காலை பாஜக தலைவர் இல.கணேசன் சந்தித்தார். அப்போது அண்ணா நூற்றாண்டையொட்டி 7 வருட சிறைக் காலத்தை முடித்த நன்னடத்தைக் கைதிகளை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கை:
குற்றம் புரிந்தவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டறிவதிலும் சில நேரங்களல் தவறுகள் நேர்கின்றன.
சில நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை யின் காரணமாக உணர்ச்சி வயப்பட்டு தண்டனைக்குரிய குற்றத்தை செய்து விடுபவர்களும் உண்டு. அவர்கள் எந்த "கிரிமினல்' பின்னணியும் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் சிறையில் தங்களது தவற்றை உணர்ந்து ஒருவித வாழ்க்கை வாழுகின்றனர்.
தண்டனை என்பது ஒருவரது தவற்றை உணர்ந்து திருந்துவதுதான் என்றால், அதற்கு 14 ஆண்டு காலம் தேவையில்லை. சிலர் குறுகிய காலத்திலேயே மனம் மாறி விடுகின்றனர்.
அத்தகையவர்களுக்கு நிச்சயமாக கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவின் துவக்கத்தையொட்டி தமிழக அரசு அறிவித்த சலுகை ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. அந்த முடிவை அன்றே பாஜக வரவேற்றது.
அண்ணா நூற்றாண்டு விழவினையொட்டி பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ள தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நிறைவுறும் நாளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து, அதற்கு முன்பு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாத, சிறை வாழ்க்கையிலும் நன்னடத்தையுடன் வாழ்கின்ற சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரை வேண்டுகிறேன்.
இந்த கோரிக்கைகளை வற்புறுத்துவதற்காகவே இன்று காலை தமிழக முதல்வரை நேரில் சந்தித்தேன். என்னுடன் மாநில துணைத் தலைவர் ஜி.குமாரவேலு, மாநில பொதுச் செயலாளர் எஸ்.மோகன் ராஜுலு மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சென்னை மாநகரத் தலைவர் துரைசங்கர் ஆகியோரும் உடனிருந்தனர் என்று கணேசன் கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications