இரட்டை கொலை வழக்கு: கிராமத்தினர் ஓடவில்லை-ஏடிஜிபி அர்ச்சனா
சென்னை: சென்னை இரட்டை கொலை வழக்கில் பனையூர் கிராமத்தை சேர்ந்த 50 பேருக்கு சம்மன் அனுப்பட்டதாகவும், அதனால் கிராம மக்கள் ஓட்டம் எடுத்ததாகவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அது தவறான செய்தி என சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நீலாங்கரை அடுத்த பனையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு பத்திரிகை ஒன்று பனையூர் கிராமத்தை சேர்ந்த 50 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியதாகவும், இதனால் கிராம மக்கள் ஓட்டம் பிடித்ததாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் மருமகள் வசந்தி, அவரது குழந்தைகளிடம் நடந்த விசாரணையில் சண்முகராஜன் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சண்முகராஜன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. கொலை அன்று அவர் பயன்படுத்திய ஹுண்டாய் கார் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்ட கார். ஏற்கனவே நீலாங்கரை காவல் நிலைய எல்லையில் ராஜாமுகமது என்பவர் கடந்த 24.6.08 அன்று இந்த கார் காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார்.
சில பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பூட்டும் செய்திகள் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications