மூளைச் சாவு - ராசிபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் சென்னையில் தானம்
சேலம்: ராசிபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவை சந்தித்த ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்துக்கு அருகே பிள்ளாநல்லூர் வேட்டல்காடு பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜா (35). இவருக்கு நதியா என்ற மனைவியும் சுபிக்சன் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி யுவராஜா ஆண்டகளூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது அவர் மீது படுவேகமாக வந்த வாகனம் ஒன்று மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அரியனூர் விநாயகா மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவர் மூளைச்சாவை சந்தித்தார்.
இதையடுத்து டாக்டர்கள் யுவராஜாவின் குடும்பத்தினரிடம் மூளைச் சாவு மற்றும் உடல்தானம் குறித்து எடுத்து கூறினர். அவர்கள் யுவராஜாவின் உடலை தானம் வழங்க முன் வந்தனர்.
அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் அவரது உடல் உறுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டு உரியவர்களுக்குப் பொருத்தப்படும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications