'ராஜவைத்தியர்' விஜயக்குமார் மீது மேலும் 4 வழக்கு
சென்னை: நோயாளிகளிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள திருவிதாங்கூர் ராஜவைத்தியர் டாக்டர் விஜயக்குமாரின் மீது ஆயுத தடுப்பு சட்டம், சொத்து குவிப்பு உள்ளிட்ட மேலும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூரில் திருவிதாங்கூர் ராஜ வைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை வைத்துள்ள டாக்டர் விஜயக்குமார்.
இவர் நோயாளிகளிடம் மான் கறி கொடுத்து குணப்படுத்துவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக புகார் வந்தது. இதையடுத்து அவர் கடந்த ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 60க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். ரூ. 3 கோடி வரை பண மோசடி செய்துள்ள அவர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் மீதான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மேலும் அவர் தி.நகரில் 3 நட்சத்திர ஹோட்டல், மதுரையில் வீடு, பழத்தோட்டம் ஆகியவைகளை வாங்கி வைத்துள்ளார். இதை முடக்குவது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் இருந்த அவரை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது.
மதுரையில் மான் வேட்டை...
அவர் பெங்களூர் நோயாளி ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது, மதுரையில் மான் வேட்டையாடியது போன்றவை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சொத்து குவிப்பு, ஆயுத தடுப்பு சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், விதிகளை மீறி டிவிக்களில் விளம்பரம் செய்தது ஆகிய நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications