13வது நாளாக மீனவர்கள் ஸ்டிரைக் - நாளை ரயில் மறியல்
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் ரூ. 5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும், கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், மீனவர்கள் தாக்கும் இலங்கை கப்பற்படை மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21ம் தேதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பித்தனர்.
இதில் ராமநாதபுரதம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இவர்களது போராட்டம் இன்று 13வது நாளாக தொடருகிறது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்பகுதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மீன் பிடி தொழிலை மறைமுகமாக நம்பியிருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் குடும்பங்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் சுமார் ரூ. 5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தி்ல் ஐந்து மாவட்ட மீனவர்கள் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் நாளை மாலை ரயில் மறியல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நாளை மாலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதென மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications