ஈழத் தமிழர் படுகொலையில் கருணாநிதி முதல் குற்றவாளி - நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது...
இலங்கை அரசு, மன்னார் வளைகுடா படுகையில் உள்ள பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்துள்ளது. இந்திய தென் பகுதியில் இந்தியாவுக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை தற்போது மாறிவிட்டது. இப்போது அது சீனாவுக்கு ராணுவத் தொழிற்சாலை அமைக்க அனுமதி அளித்து விட்டது. இது இந்தியாவுக்கு ஆபத்தை உண்டாக்கும் .
பிரபாகரன் பற்றி பலவிதமான செய்திகள் பரப்பப்படு வருகின்றது. ஆனால் பிரபாகரன் உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்.
உலக அளவில் வாழும் 9 கோடி தமிழர்களும் ஒன்றுகூடி மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்து போரிடுகின்ற வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி தான் முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்ச.
இவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தி நிரூபிக்காமல் விடமாட்டோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications