ரயில் மறியில்-வீரமணி உட்பட 550 பேர் கைது
சென்னை: இலங்கையில் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற கோரி இன்று தடையை மீறி ரயில் மறியல் செய்ய முயன்ற திராவிட கழகத்தினர் சுமார் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி இன்று ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சுமார் 550க்கும் மேற்பட்ட திராவிட கழக தொண்டர்கள் பெரியார் திடலில் ரயில் மறியலுக்கு திரண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அதற்கு முன்னதாக திராவிட கழக தலைவர் வீரமணி தொண்டர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதியுடன் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த விஷயத்தில் அவருடன் யாரும் பகைமை பாராட்ட வேண்டாம். அவர் இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர்.
ராஜபக்சே பதவிக்கு வந்த போது தான் தமிழர்களுக்கு எதிரி அல்ல என கூறினார். ஆனால், தற்போது தமிழர்களை வாழ முடியாமல் அவர் செய்துவிட்டார்.
அங்கு மனித உரிமை மீறப்படுவதாக அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா இன்னும் அமைதியாகவே இருக்கிறது.
வன்னி பகுதிகளில் வன் கொடுமை முகாம்களில் இருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகிறோம்.
இந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் முதல்வர் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications