குஜராத்தில் கர்ப்பிணி பலி- இதுவரை 108 பேர் மரணம்
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 7 மாத கர்ப்பிணி ஒருவர் பலியாகியுள்ளார். நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் பாவ்யா தாவே என்ற 23 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் 29ம் தேதி எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் கடும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளித்து வந்தனர.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு மரணமடைந்தார். இதையடுத்து குஜராத்தில் இந்த கொடூர நோய்க்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை குஜராத்தில் சுமார் 118 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 94 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்தியாவில் 108 பேர் பலி...
தற்போது இந்த நோய் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரத்து 609 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மேலும் 40 ஆயிரம் பேருக்கு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களின் எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் 657, அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications