இடைக்கால முதல்வராக ரோசய்யா பதவியேற்பு
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து இடைக்கால முதல்வராக நிதியமைச்சர் கே.ரோசய்யா பதவியேற்றுக் கொண்டார்.
ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து இடைக்கால முதல்வராக நிதியமைச்சர் ரோசய்யாவை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
ரோசய்யா மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்தவர். ஆந்திர மாநிலத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவர்.
இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்ட ரோசய்யா இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் என்.டி.திவாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அடுத்த முதல்வர் யார்...?
இதற்கிடையே, ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜசேகர ரெட்டியின் நிர்வாகத்தில் அவரைத் தவிர வேறு யாரும் தெளிவான தலைவர்களாக அடையாளம் காணப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் ராஜசேகர ரெட்டியே முன்னின்று எடுப்பார். அவருக்கு அடுத்து இவர்தான் என்று யாரையும் தெளிவாக சொல்ல முடியாத நிலை.
இதனால் ரெட்டிக்கு அடுத்து முதல்வராக யாரைப் போடுவது என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
திறமை வாய்ந்த ஒரு தலைவரையே முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், காங்கிரஸ் கட்சி விரைவில் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும்.
தற்போதைய நிலையில் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி, புரந்தேஸ்வரி ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன. அதேசமயம், தனது வாரிசாக ராஜசேகர ரெட்டியால் அடையாளம் காட்டப்பட்ட அவரது மகன் ஜெகன் ரெட்டிக்கு முதல்வர் பதவி தரப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications