கார் விபத்து - உயிர் தப்பிய பாமக எம்எல்ஏ
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே இலவச மருத்துவ முகாமுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த பெரணமல்லூர் பாமக எம்எல்ஏ எதிரொலி மணியன் அதிர்ஷ்டவசமாக கார் விபத்திலிருந்து உயிர் தப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுக்கு அடுத்த பகவந்தபுரத்தில் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றது.
இந்த விழாவில் பெரணமல்லூர் சட்டசபை தொகுதி பாமக எம்எல்ஏ எதிரொலி மணியன் கலந்து கொண்டார். பின்பு அவர் அங்கிருந்து சேத்துப்பட்டில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது வந்தவாசி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெடுங்குணம், அரசு மேல் நிலைப்பள்ளி அருகே அவர் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னதாக சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத எம்எல்ஏ, லாரி மீது மோதிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் காரை வேகமாக இடதுபக்கம் திருப்பினார்.
இதையடுத்து கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடி அருகில் இருந்த ஏரிக்கால்வாய் பள்ளித்தில் விழுந்து உருண்டது. இந்த சம்பவத்தில் எதிரொலி மணியன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications