ராஜசேகர ரெட்டி மரணம் - தமிழகத்துக்கு நிஜமான இழப்பு
சென்னை: பாலாற்றுப் பிரச்சினையில் டாக்டர் ராஜசேகர ரெட்டியுடன் பேசி சுமுக நிலையை ஏற்படுத்தும் திட்டத்திலிருந்த முதல்வர் கருணாநிதிக்கு, ரெட்டியின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாயும் ஒரே ஆறு பாலாறு. ஆனால் கர்நாடகாவின் 'புண்ணிய'த்தில் அந்த ஆற்றில் நீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. மழைக்காலங்களில் மட்டும் ஓரளவு வெள்ளம் வரும்.
அதையும் தடுப்பது போல ஒரு அணையைக் கட்ட முடிவு செய்திருந்தது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம். பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜசேகர ரெட்டியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இது குறித்து தமிழகத்தின் முறையீடுகளை அவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தடுப்பணைகளைக் கட்டும் ஆரம்பப் பணியில் இறங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராஜசேகர ரெட்டி சம்மதித்திருந்தார். மேலும் அந்த விழாவின் போது பாலாற்றுப் பிரச்சினை குறித்து இரு மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் முடிவை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். இதனை முதல்வர் கருணாநிதியும் உறுதிப்படுத்தினார்.
தமிழக தரப்பு நியாயங்களைக் கேட்ட பிறகு, நிச்சயம் நாம் சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தாராம் ரெட்டி.
இந்த நிலையில்தான் இப்படியொரு சோகம் நடந்துவிட்டது.
"நதி நீர் பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளும் மனப்பான்மை கொண்டவர் ரெட்டி. இரு மாநில மக்களுக்கும் ஏற்ற நல்ல முடிவை அவர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
முதல்வர் கருணாநிதியே தனிப்பட்ட முறையில் இதுகுறித்து ராஜசேகர ரெட்டியிடமும் பேசியிருந்தார். ஆனால் இப்படியாகி விட்டதே...", என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications