ஹெலிகாப்டர் விபத்து - விசாரணைக் குழுவை அமைத்தது மத்திய அரசு
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.தியாகி இந்த விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்குவார். இக்குழுவில், தியாகி உள்பட நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு 2 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
இதற்கிடையே, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (டிஜிசிஏ) தனியாக ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து டிஜிசிஏ தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
மற்றபடி ஹெலிகாப்டரில் கோளாறு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. நெருக்கடி நேரத்தில் தரப்படும் சிக்னல்களும் அனுப்பப்படவில்லை. மோசமான வானிலையிலும் கூட பறக்கக் கூடிய தகுதியுடன்தான் ஹெலிகாப்டர் இருந்தது.
இருப்பினும் விசாரணைக்குப் பின்னரே விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரிய வரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பெல் 430 ரக ஹெலிகாப்டர்கள் பறக்கும் தகுதியுடன்தான் உள்ளன. ரெட்டி பயன்படுத்திய விமானம் 2010ம் ஆண்டு வரை பறப்பதற்கான உரிமத்தை வைத்திருந்தது.
விபத்தில் உயிரிழந்த இரு பைலட்டுகளும் அனுபவம் வாய்ந்தவர்கள். திறமையானவர்கள் என்றார் படேல்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications