திமுக பிரமுகருக்கு அடி - போலீஸைக் கண்டித்து ஆர்பாட்டம்
சுரண்டை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே திமுக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து 6ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது.
கீழப்பாவூர் ஓன்றியம் அரியப்பபுரம் ஊராட்சி எல்லப்புளியை சேர்ந்தவர் துரை. திமுக கிளை செயலாளராக உள்ளார். இவர் தொழில் செய்தவற்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெறுவதற்கு அதன் தலைவியை நாடியுள்ளார். இதற்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தலைவி துரைக்கு கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக துரை பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காததால் ஆலங்குளம் டிஎஸ்பியிடம் மனு கொடுத்தார்.
அதன்மீது விசாரணை நடத்தும்படி டிஎஸ்பி பாவூர்சத்திரம் போலீசுக்கு பரிந்துரை செய்தார். இது போலீசாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே திமுக பிரமுகர் துரையை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
திமுக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு வரும் 6ம் தேதி (ஞாயிறு காலை) 10 மணிக்கு கீழப்பாவூர் ஓன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications