ராகுல் காந்தி 8ம் தேதி தமிழகம் வருகிறார் - தங்கபாலு

ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் ராகுல் காந்தி. அவரது அயராத முயற்சியால், உ.பி. மாநிலத்தில் அடிமட்டத்தில் கிடந்த காங்கிரஸ் இன்று நல்ல வலுவை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
அதற்கு முன்னோட்டமாக இளைஞர் காங்கிரஸை புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளது தமிழக காங்கிரஸ். தற்போது இளைஞர் காங்கிரஸுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், கட்சி இளைஞர்களுடன் உரையாடவும் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக அவர் தமிழகம் வருகிறார். வருகிற 8ம் தேதி கன்னியாகுமரிக்கு முதலில் வருகிறார் ராகுல். பின்னர் மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்கிறார்.
10ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் ராகுல் காந்தி.
இத்தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் வருகையைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications