எருமையை வெட்டி ரத்தம் குடிக்கும் திருவிழா

Subscribe to Oneindia Tamil

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் எருமை மாடுகளை வெட்டி நரிக்குறவர்கள் ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரத்தில் நரிக்குறவ மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீற்று கொட்டகையில் வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காளி, மீனாட்சி, மாரி, கருப்பசாமி, பாண்டி போன்ற தெய்வங்களை வைத்து வணங்கி வருகின்றனர்.

கடந்த 3ம் தேதி இரவு பெருமாள் பூஜையும், 4ம் தேதி மாவிளக்கு பூஜையும் நடத்தினர். அப்போது, காளிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

பின்னர் அவர்கள் இரண்டு எருமை மாடுகளை குளிப்பாட்டி காளியின் முன் நிறுத்தினர்.

பின், மாடுகளின் நான்கு கால்களையும் கயிற்றால் கட்டி கீழே சாய்த்து கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடித்தனர். மேலும, சிலர் ஆடுகளை வெட்டி பலி கொடுத்தனர்.

நரம்புகளை நடுங்க வைக்கும் இந்தத் திருவிழா அப்பகுதியில் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+