ஐஸ்கிரீமில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை கற்பழித்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் உடன் வேலைபார்க்கும் பெண்ணுக்கு ஐஸ்கிரீமில் மயக்கமருந்து கலந்து கொடுத்து கற்பழித்த கல்லூரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பணகுடி, மங்கம்மாள் சாலையில் வசித்து வரும் இளையபெருமாள் என்பவரின் மகள் செல்வி. இவர் நேற்று பணகுடி இன்ஸ்பெக்டர் சிவராஜீடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்,

நான் வடக்கன்குளத்தில் உள்ள பொறியியல் கல்லுரியில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் நாகர்கோவிலை சேர்ந்த எட்வின் கோல்டன் சரப் என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

நாங்கள் இருவரும் சாதாரணமாக பழகி வந்தோம். இந் நிலையில் கடந்த 3-12-08 அன்று கோட்டாறு சவேரியர் திருவிழாவுக்கு கோல்டன் சரப் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகிய இருவரும் என்னை வருமாறு அழைத்தனர். இதனால் நான் அவர்களது வீட்டிற்கு சென்றேன்.

அப்போது அங்கு எட்வின் கோல்டன் சரப் மட்டும் தான் இருந்தார். அவர் எனக்கு ஐஸ்கீரி்ம் வாங்கி கொடுத்தார். அதை சாப்பிட்டு மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். அப்போது அவர் என்னை கற்பழித்துவிட்டார்.

இதையடுத்து இந்த மாதம் 1ம் தேதி நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் வற்புறுத்தினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

மேலும் அவரை நான் ஏமாற்றி பணம், நகை வாங்கி கொண்டதாக வடசேரி போலீசில் புகார் தெரிவித்தார். அங்கு எங்களை விசாரித்த போலீசார் அவர் கொடுத்த பணத்தையும், நகைகளையும் என்னிடம் இருந்து வாங்கி கொண்டனர்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் ஏமாற்றி விட்டார். என்னை கற்பழித்த எட்வின் கோல்டன் சரப் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் எட்வின் கோல்டன் சரப்பை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+