ராகுல் காந்தியின் 3 நாள் தமிழக பயணம்- வெளியிட்டார் தங்கபாலு
சென்னை: காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தியின் மூன்று நாள் தமிழகம் சுற்றுப்பயண விவரத்தை அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,
தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி முதல் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை புத்துணர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் வரும் 8ம் தேதி முதல் மூன்று நாட்கள் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாகர்கோவிலில் ஆரம்பிக்கிறார்...
வரும் 8ம் தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கிறார். 11.30 மணிக்கு திருநெல்வேலியில் இளைஞர் காங்கிரஸினரை சந்தித்து பேசுகிறார்.
மதியம் 1 மணிக்கு விருதுநகரிலும், 3.30 மணிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் இளைஞர்களை சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு இளைஞர்களிடம் உரையாற்றுகிறார்.
மறுநாள் 9ம் தேதி தஞ்சாவூரில் காலை 8 மணிக்கு இளைஞர்களையும், 9.30 மணிக்கு விவசாய இளைஞர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார்.
பின்னர் காலை 10.30 மணிக்கு விழுப்புரத்திலும், மதியம் 12 மணிக்கு வேலூருக்கும் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு சிஎம்சி கல்லூரி மாணவர்களை சந்திக்கிறார்.
மதியம் 3 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
10ம் தேதி கோவை வருகிறார்...
பின்னர் மாலை 6.30 மணியளவில் சென்னை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கிறார். 10ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை பத்திரிகையாளர்களை ராகுல் சந்திக்கிறார்.
பின்னர் காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி செல்கிறார். காலை 11 மணியளவில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதியம் 12.30 மணிக்கு சேலம் செல்கிறார். 1.30 மணிக்கு இளைஞர்களை சந்திக்கிறார். மாலை 3 மணிக்கு கோவை செல்லும் அவர் அங்கு இளைஞர்களை சந்திக்கிறார். பின்னர் 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டத்திலும், 5 மணிக்கு தொழில் முனைவோருடனும் பேசுகிறார்.
ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தை அடுத்து காங்கிரஸார் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவருக்கு பலதத் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications