ஹோட்டலில் காதலர் மர்ம சாவு-மாணவியிடம் போலீஸ் விசாரணை
சேலம்: சேலம் ஹோட்டலில் காதலியான என்ஜீனியரிங் மாணவியுடன் தங்கிய சாப்ட்வேர் என்ஜீனியர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து அந்த மாணவியைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 25 வயதான இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு லாட்ஜுக்கு கார்த்திகேயனும், 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் வந்து அறை எடுத்துத் தங்கினர்.
அறைக்குள் போன சில நிமிடங்களில் அந்தப் பெண் அலறியபடி ஓடி வந்தார். கார்த்திகேயன் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கார்த்திகேயனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திகேயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தெரிய வந்ததாவது:
கார்த்திகேயன், ராசிபுரத்தில் இருந்த போது அவருக்கும் பட்டணம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. சந்தியா தற்போது திருச்செங்கோட்டில் என்ஜீனியரிங் 3வது ஆண்டு படித்து வருகிறார்.
கார்த்திகேயன் நேற்று சேலம் வந்து, சந்தியாவை அழைத்துள்ளார். அவரும் சேலம் புறப்பட்டு வந்தார். பஸ் நிலையம் அருகே லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மயக்கமடைவதற்கு முன்பு அறையில் ஒன்றாக சாப்பிட்டதாக போலீஸாரிடம் சந்தியா தெரிவித்துள்ளார். எனவே சாப்பாட்டில் விஷம் இருந்ததா அல்லது மாரடைப்பால் கார்த்திகேயன் இறந்தாரா என்பது தெரியவில்லை.
அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications