மெரீனாவில் மாயமான வைர வியாபாரி மனைவி
சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த வைர வியாபாரியின் இளம் மனைவி காணாமல் போய் விட்டார். அவரை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா அல்லது கணவரே அவரை ஏதேனும் செய்து விட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் ஜெய்ஸ்வால் (26). வைர வியாபாரி. இவருக்கும் பிரியா (23) என்பவருக்கும் ஏப்ரல் 17ம் தேதி திருமணம் நடந்தது.
இதையடுத்து தேனிலவுப் பயணம் கிளம்பினர் ஜெய்ஸ்வால் தம்பதியினர். திருப்பதி, கன்னியாகுமரி, சென்று திரும்பிய அவர்கள் சென்னைக்கு வந்தனர்.
எழும்பர் அருங்காட்சியகம், கிண்டி சிறுவர் பூங்கா சென்ற பின்னர் மாலையில் மெரீனா கடற்கரைக்கு வந்தனர்.
மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பிரியா மட்டும் எழுந்து கடலை நோக்கிப் போயுள்ளார். ஆனஆல் போக வேண்டாம் என்று கூறி அழைத்துள்ளார் ஜெய்ஸ்வால். அப்போது பிரியாவின் பின்னால் சில வாலிபர்கள் போனதாக தெரிகிறது. சற்று நேரத்தில் பிரியாவைக் காணவில்லையாம்.
வழி தெரியாமல் பிரியா போய் விட்டாரோ என்ற எண்ணத்தில் கடற்கரையில் தேடிப் பார்த்துள்ளார் ஜெய்ஸ்வால். ஆனால் பிரியாவைக் காணவில்லை. இதையடுத்து அண்ணா சதுக்க போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
போலீஸார் முதலில் ஜெய்ஸ்வாலை தீவிரமாக விசாரித்தனர். அப்போது சென்னைக்கு வந்தவுடன் பிரியாவுக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையே சண்டை நடந்ததாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போனைப் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், பிரியாவை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications