ஸ்வைன்:கோவாவில் மேலும் இருவர் பலி-இந்தியாவில் 135 சாவு
டெல்லி: இந்தியாவில் நேற்று மட்டும் பன்றி காய்ச்சல் நோய்க்கு 4 பேர் பலியாகியுள்ளனர். கோவாவில் இருவரும், டெல்லி, கர்நாடகாவில் தலா ஒருவரும் இறந்ததையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 28ம் தேதி பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 69 வயதான துர்கா பிரசாத் என்பவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு 18 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. மேலும், அவர் சிறுநீரக கோளாறு காரணமாக டையலசீஸ் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரது உடல்நிலை மோசமாகி இறந்தார். இதையடுத்து டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதை தவிர கோவாவில் இருவரும், கர்நாடகவில் ஒருவரும் பலியாகி உள்ளனர். அவர்களின் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த நோய் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று மட்டும் சுமார் 147 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,885 ஆக கூடியுள்ளது.
டெல்லியில் 12 வயதான சிறுமி ஒருவருக்கு பன்றி காய்ச்சலால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவரது நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்று பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த இயலவில்லை-குலாம் நபி ஆசாத்...
இந்நிலையில் காத்மாண்டுவில் நடந்த உலக சுகாதார மையத்தின் 27வது தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,
தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும், பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த இயலவில்லை. இது பரவுவதை தடுக்க நோயின் துவக்கத்திலே கண்டுபிடித்தல், அதற்கு முறையான சிகிச்சை கொடுத்தல் மற்றும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே முடியும்.
மருத்துவ சேவைகளை அதிகரித்தல், தேவையான மாத்திரைகள் சேமித்து வைத்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
பிரேசிலில் 747 பேர் பலி...
பன்றி காய்ச்சல் உலகிலே பிரேசில் நாட்டில் தான் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கு நேற்று மட்டும் 90 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 747 பேர் இறந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications