செல்போனில் 1ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்
லக்னோ: உ.பி. மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் தனது செல்போனில் ஆபாசப் படத்தை பார்த்துள்ளார். அத்தோடு நில்லாமல், 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைக் காட்டி ஆசிரியர் தொழிலுக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த அசிங்கம் பிடித்த ஆசிரியரின் பெயர் சிவக்குமார். புலந்த்சாகர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
திங்கள்கிழமை இப்பள்ளியைச் சேர்ந்த 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர் ஆபாசமான படத்தைக் காட்டியதாக கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் திரண்டு வந்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ரமேஷ் சந்திர வர்மாவிடம் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து வர்மா கூறுகையில், இந்தப் புகார் மிகக் கடுமையானது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை அவர் வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
படம் பார்த்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என்று சிவக்குமார் மாணவர்களை மிரட்டி வைத்திருந்தாராம்.
இந்த சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications