வெள்ளம்-குற்றாலத்தில் 3வது நாளாக குளிக்க தடை
Subscribe to Oneindia Tamil

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மெயினருவி, ஐந்தருவி, ஆகியவற்றில் ஆக்ரோஷமாக தண்ணீர் விழுகிறது.
இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.
குற்றாலத்தில் வெள்ள பெருக்கு காரணமாக மூன்று நாட்கள் குளிக்க தடை விதிக்கப்படுவது இந்த ஆண்டு இது தான் முதல் முறை.
சீசன் காலத்தை விட தற்போது தண்ணீர் நன்றாக விழுந்து வருகிறது. என்றாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications