முடிவுக்கு வருகிறது ஜெட் ஸ்டிரைக்-புக்கிங் துவங்கம்
மும்பை: பணியாளர்களின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ். இதனைத் தொடர்ந்து மீண்டும் விமான டிக்கெட்டுகளுக்கான புக்கிங் மீண்டும் தொடங்கியது.
கடந்த இரு தினங்களாக ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஒட்டுமொத்த விடுப்பில் சென்றுவிட்டதால், ஜெட் ஏர்வேஸின் விமானப் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய்விட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட விமானிகளை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், விமானிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். இந்தப் பேச்சில் சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக விமானிகள் சங்கத்தின் தலைவர் கௌசிக் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட 4 விமானிகளையும் நிபந்தனையின்றி மீண்டும் சேர்த்துக்கொள்ள ஜெட் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் ஸ்டிரைக் வாபஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஸ்டிரைக் வாபஸ் பெற்றதாக அறிவிப்பு வந்த அடுத்த வினாடியே வேலைக்கு திரும்ப தயாராக இருப்பதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவன பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பொருளாதார மந்தம் போன்ற பிரச்சினைகளால் சம்பளம் வருவதே சிக்கலாக உள்ள சூழலில் இந்த ஸ்ட்ரைக்கை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவருவது முக்கியம் என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் புக்கிங் துவங்கியது!
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் இன்று துவங்கியது. இதில்
நாளை அலகாபாத்தில் இருந்து டில்லிக்கு செல்லும் விமானங்களுக்கும், ராஜ்கோட்டிலிருந்து மும்பை செல்லும் விமானங்களுக்குமான டிக்கெட் புக்கிங்கை இந்நிறுவனம் துவக்கியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications