ராகுல் கூட்டத்துக்கு வந்த முன்னாள் காங். எம்.பி மரணம்
கோவை: ராகுல் காந்தி கூட்டத்துக்கு வந்த பொள்ளாச்சி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கந்தசாமி (68) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கோவையில் நேற்று நடந்த ராகுல்காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பொள்ளாச்சி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி கந்தசாமி வந்தார்.
மேடைக்கு அருகே நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த அவரை காங்கிரசார் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கந்தசாமி உயிரிழந்தார்.
கந்தசாமி மரணம் அடைந்த செய்தி ராகுல்காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கந்தசாமியின் உடலுக்கு ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.
நிருபர்களுக்கு அடி உதை
இதற்கிடையே, ராகுல் காந்தியின் கிருஷ்ணகிரி வருகையின் போது புகைப்படம், வீடியோ எடுக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அடி உதை விழுந்தது.
நேற்று ராகுல் காந்தி தனது தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு வந்தார்.
அங்கு நடந்த கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்தார். பின்னர் ரசிகர்கள், வீரர்களுடன் இணைந்து புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தார்.
ராகுல் காந்தி நிகழ்சியை செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்ககள் செல் போனை போன் வைத்துக் கொள்ள போலீசார் தடை விதித்திரருந்தனர்.
இது பத்திரிக்கை சுதந்திரத்தில் தலையிடும் செயல், மேலும் மனித உரிமையை பறிக்கும் செயல் என்று கூறி செய்தியாளர்கள் ஆவேசப்பட்டனர்.
இதனால், போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இருப்பினும், செல் போன் இல்லாத செய்தியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு 1.30 மணியளவில் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
விளையாட்டுப் போட்டியை பார்வையிட ராகுல் காந்திக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து சுமார் 150 அடி தூரத்தில் செய்தியாளர்களுக்கான தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதில் 35 செய்தியாளர்களைச் சுற்றி 16 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ராகுல் காந்தி இருக்கையின் ஓரம் நடப்பட்டிருந்த தூண் புகைப்படம் எடுக்க தடையாக இருந்தது. இதனால், கோரஸாக செய்தியாளர்கள் குரல் எழுப்பினர்.
சற்று நேரத்தில் மேடையிலிருந்து இறங்கி மைதானத்தைச் சுற்றி நடந்து சென்ற ராகுல் காந்தி பார்வையாளர் பகுதியில் பாதுகாப்பு தடுப்புக்குள் நுழைந்து சென்றார்.
அங்கு பொது மக்களுடன் அமர்ந்து போஸ் கொடுத்தார். அப்போது, எதிர்ப்பக்கத்தில் இருந்த பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சைகையால் அழைத்தார்.
அதனால், கேமராக்களுடன் செல்ல முயன்ற செய்தியாளர்களை போலீசார் சுற்றி வளைத்து தாக்கினர். இதில், சன் டிவி வீடியோ கிராபர் இளம்பருதி, ஜெயா டி.வி வீடியோ கிராபர் பிரகாஷ் ஆகியோருக்கு அடி உதை விழுந்தது. மாலை மலர் புகைப் படக்காரரின் கேமரா கீழே விழுந்து உடைந்தது.
இந்த சம்பவத்திற்கு கிருஷ்ணகிரி பத்தரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications