துருக்கியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

Subscribe to Oneindia Tamil

அங்காரா: துருக்கியில் 7 மணி நேர இடைவெளியி்ல அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து, தெருவில் வசித்து வருகின்றனர்.

சமீபகாலமாக உலகம் முழுவதும் நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று நியூசிலாந்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று துருக்கியில் கொன்யா மாகாணப்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை சுமார் 12.28 மணிக்கு 4.5 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் கட்டிடங்கள் வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

முதல் மாடியில் இருந்தவர்கள் சிலர் உயிர்தப்பிக்க அங்கிருந்து குதித்து காயமடைந்தனர். சிலர் ஜன்னல்களில் வழியாக வெளியே வந்து உடலில் சிராய்ப்புகளை பெற்று கொண்டனர்.

இதை தொடர்ந்து காலை சுமார் 7.28 மணிக்கு இரண்டாவது பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. இந்த இரண்டு நிலநடுக்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கத்தால மிரண்டு போன மக்கள் வீடு, கட்டிடங்களுக்குள் செல்வதை தவிர்த்து வருகின்றனர். போர்வையை வைத்து தெருவில் கூடாரம் போட்டு, கார்களிலும் அடைக்கலம் தேடியும் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 1999ம் ஆண்டு நவம்பரில் துருக்கியில் ஏற்படட நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+