சென்னை-விபத்தில் டிவி கேமராமேன், 2 பேர் பலி
சென்னை: சென்னையில் இன்று காலை நடந்து மூன்று விபத்துக்களில் தனியார் டிவி கேமராமேன் உட்பட மூன்று பேர் பலியானார்கள்.
அந்த கேமராமேனின் பெயர் நல்லதுரை (36). சென்னை ஜயப்பன்தாங்கலை சேர்ந்த அவர் ஒரு தனியார் தொலைகாட்சியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை ஆற்காடு சாலையில் ஆவிச்சி பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஷேர் ஆட்டோ மோதி தலையில் பலத்த அடிபட்டு பலியானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிண்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் அண்ணா நகருக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்று கொண்டிருந்த எம்கேபி நகர் காவல் நிலைய ஏட்டு கார் மோதி பலியானார். அவரது டேனியல் ராஜ்(45).
அதேபோல் முகப்பேரை கொத்தனார் ஒருவரும் சாலை விபத்தில் பலியானார். அவரது பெயர் பிரபு. 26 வயதான அவர் ராஜமங்கலம் தாதங்குப்பம் அருகை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 200 அடி சாலையில் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications