இந்தியருக்கு போலி பாஸ்போர்ட்-பாக். தூதர் கைது
இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு போலியான பாஸ்போர்ட் கொடுத்த வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் தூதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் இருந்த பாகிஸ்தானின் துணை தூதராக இருந்த குலாம் ரசூல் தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவை சேர்ந்த அசிஸ் மூசா என்பவரை பாகிஸ்தானிய குடிமகன் என கூறி மோசடி செய்துள்ளார். மேலும், அந்த மூசா என்ற நபருக்கு சையத் அலி என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டும் கொடுத்துள்ளார்.
இதை கண்டுபிடித்த பாகிஸ்தான் அதிகாரிகள் இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 17 மாதங்களுக்கு முன்னதாக குலாம் ரசூலின் உதவியாளராக வேலை பார்த்த முகமது நையீம் கைது செய்யப்பட்டார்.
நீண்ட விசாரணைக்கு பின் போலீசார் நையீமிடம் இருந்து உண்மைகளை பிடுங்கினர். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பி்த்தனர்.
இதை விசாரித்த நீதிபதி குலாம் ரப்பானி, ஜவாத் குவாஜா அடங்கிய 3 பேர் கொண்ட பெஞ்ச், ரசூலை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications