பொறுப்பில்லாமல் பேசும் ப.சி- வெங்கய்யா
பெங்களூர்: அன்னிய மண்ணில் குஜராத் என்கவுன்டர் போன்ற செயல்கள் குறித்து பேசி மத்திய உள்துறை அமைச்சர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார் என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
குஜராத் என்கவுன்டரில் கொல்லப்டட இஷ்ரத் குற்றவாளியல்ல. அது போலி என்கவுன்டர் என சமீபத்தில் குஜராத் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம் வாஷிங்கடன் நகரில் குஜராத் அரசு போலியான என்கவுன்டர் செய்துள்ளது. மத்திய புலனாய்வு கொடுத்த தகவலை முழு ஆதாரமாக வைத்து செயல்பட்டதாக தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க கூடாது என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில்,
வாஷிங்டன் சென்றுள்ள சிதம்பரம் தான் அன்னிய நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்து பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். இது நியாயமற்ற, அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.
இது நாட்டுக்கு உலக அளவில் அவப் பெயரை தேடி தரும் செயல் மட்டுமல்லை. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்த கூடியது.
குஜராத் என்கவுன்டர் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. அங்கு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் எப்படி இது போன்ற ஒரு முடிவுக்கு வர முடியும்.
தீவிரவாத ஒழிப்பு போன்ற முக்கிய விஷயங்களில் கூட அவர் இது போன்று பேசுவது நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும். குஜராத் அரசு மற்றும் மோடியின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற மோசமான நோக்கத்துடன். ஒன்றுமில்லாத விவகாரத்தை காங்கிரஸ் ஊதி பெரிதாக்குகிறது.
காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மற்ற மாநிலங்களை விட கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் குறைந்த அளவு என்கவுன்டர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகமே இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் என கூறியுள்ளது.
இஷ்ரத் தீவிரவாதி இல்லை என்று வைத்து கொண்டால் கூட மற்ற மூவரும் யார்? இரண்டு பாஸ்போர்ட் வைத்திருந்த ஜாவித் ஷேக் என்ற பரனேஷ் பிள்ளை என்பவர் ஓமனுக்கு சென்று லஷ்கர் அமைப்பினர் சந்தித்துள்ளார். அவரும் தீவிரவாதி இல்லை என கூற முடியுமா?
இந்திய உளவுத்துறை இஷ்ரத் மற்றும் ஜாவித் ஆகியோர் கணவன், மனைவி போல் லக்னௌ, ஆக்ரா போன்ற நகரங்களுக்கு சென்றுள்ளனர் என அறிவித்துள்ளது.மும்பையில் கல்லூரியில் படித்த அந்த பெண் ஆமதாபாத்தில் காரில் என்ன செய்து கொண்டிருந்தார் என்றார்.












Click it and Unblock the Notifications