அமெரிக்கா அளித்த ஆயுதம், நிதியை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தினோம் - முஷாரப் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்த நிதியின் பெரும் பகுதி மற்றும் ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பலப்படுத்த பயன்படுத்தினோம் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.

அமெரிக்கா, தீவிரவாதத்திற்கான எதிரான போருக்காக பாகிஸ்தானுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறது. தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்து வருகிறது அமெரிக்கா.

ஆனால் காலைச் சுற்றிய தலிபான் என்ற பாம்பை அடிக்க அமெரிக்க கொடுத்த கம்பைப் பயன்படுத்தி, எந்தவிதத் தொந்தரவும் செய்யாமல், செய்கிற தொந்தரவுகளையும் சகித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது பாகிஸ்தான்.

அமெரிக்க அரசு வழங்கிய கப்பல்களைத் தகர்க்கப் பயன்படும் ஏவுகணைளை இந்தியாவின் போர்க் கப்பல்களைத் தாக்கக் கூடிய அளவுக்கு திறமையானதாக மாற்றி அமைத்து பாக் செய்த தில்லாலங்கடி வேலை சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்து அமெரிக்காவை கோபத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்காக, தனது ஆட்சியின்போது அமெரிக்கா கொடுத்த பணத்தை பெருமளவில் தனது நாட்டு ராணுவத்தை இந்தியாவுக்கு எதிராக பலப்படுத்த பயன்படுத்திக் கொண்டதாக முஷாரப் ஒப்புக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர் இப்படி பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு இதுதொடர்பாக முஷாரப் அளித்துள்ள பேட்டியில், ராணுவ உதவிகளை பயன்படுத்துவது தொடர்பாக விதிகளை மீறி நடந்து கொண்டது உண்மைதான். ஆனால் எனது நடவடிக்கைகள், எனது அரசின் நடவடிக்கைகள், பாகிஸ்தானின் நலனைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டதே. எனவே அதில் எந்தத் தவறும் இல்லை.

எனது இந்தப் பேச்சால் அமெரிக்கா கோபமடைந்தால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. பாகிஸ்தானின் நலன்களை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் நான் அமெரிக்காவை ஆதரிக்க முன்வராமல் இருந்திருந்தால், இன்னேரம் அமெரிக்கப் படைகள், பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையங்களை முழுமையாக கைப்பற்றியிருக்கும்.

மேலும் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பாகிஸ்தானை தாக்கியிருக்கவும் கூடும்.

எனது ஆட்சியின்போது பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்கள் மிகவும் நவீனமாகின. யுரேனியத்தை செறிவூட்டுவதில் எங்களது விஞ்ஞானிகள் பெரும் நிபுணத்துவம் பெற்றனர். அது மட்டுமல்லாமல், புளுட்டோனியத்தைக் கொண்டு ஆயுதங்களை வடிவமைக்கவும் அவர்கள் திறமை பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணு வி்ஞ்ஞானி அப்துல் காதிர் கான் நாட்டுக்காக நிறைய நல்லது செய்துள்ளார். அதேசமயம், தன்னை வற்புறுத்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்து விட்டதாக அவர் கூறுவது பொய்யாகும் என்று கூறியுள்ளார் முஷாரப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+