அண்ணா பிறந்தநாள்-கோவை குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேர் விடுதலை

இந்த 9 பேரும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனுமதியின்றி குண்டுகள், ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 307ன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களில் 9 பேர் இன்று காலை 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளனர். மற்ற ஒருவர் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து சிறையில் இருப்பார். இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.
விடுதலையானோர் விவரம்: முகம்மத் இப்ராகிம், அப்துல் ரகீம், அப்துல் பாரூக், அப்பாஸ், முகம்மத் ரபீ்க், அப்துல் ரவூப், அஷ்ரப், பக்ருதீன் அலி அகமமத் மற்றும் சாகுல் ஹமீத்.
யூசுப் ஷாஜகான் என்பவருக்கும் விடுதலை உத்தரவு வந்துள்ளது. அவருக்கு வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால், விடுதலை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்ச்சியையொட்டி 1,405 கைதிகளை அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் கைதிகள் போராட்டம்:
இந் நிலையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இன்று புழல் சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்ச்சியையொட்டி 140 கைதிகளை அரசு விடுவித்தது.
ஆனால் இந்த ஆண்டு கோவை சிறை கைதிகளை மட்டுமே விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையின் 1வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 750 கைதிகள் இன்று காலை உணவுக்காக கூடியபோது திடீரென தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications