இந்தியா-பன்றி காய்ச்சல் பலி 200ஐ தாண்டியது

நேற்று இந்த நோய்க்கு மகாராஷ்டிராவில் 5, டெல்லி 2, குஜராத்தில் ஒருவர் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இறந்தவர்களில் மூன்று பேர் புனேவை சேர்ந்தவர்கள். தலா ஒருவர் மும்பை மற்றும் நாக்பூரை சேர்ந்தவர்கள். குஜராத்தில் சுரத்தில் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
டெல்லியில் பலியான வாலிபருக்கு 26 வயது மட்டுமே ஆகிறது. டெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரைவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 87, கர்நாடகாவில் 66, குஜராத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.
அதேநேரத்தில் நேற்று மட்டும் மேலும் 229 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,588 ஆக உயர்ந்துள்ளது.
மெக்சிகோவை முந்திவிடும்...
இந்தியாவில் பலி எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் இந்தியா, இந்த பன்றி காய்ச்சல் தோன்றிய மெக்சிகோவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
நேற்று வரை மெக்சிகோவில் 23 ஆயிரத்து 245 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி, அதில் 215 பேர் பலியாகியுள்ளனர். அதாவது இந்தியாவை விட சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு நாடுகளிலும் ஒரே போல் தான் உள்ளது.
பிரேசிலில் 884 பேர் பலி...
உலக அளவில் இந்த நோய் பிரேசிலில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 884 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 641 பேரும், அர்ஜென்டினாவில் 514 பேரும் இறந்துள்ளனர்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications