முகாம் அவலம்-இலங்கைக்கு ஐ.நா நெருக்குதல்
கொழும்பு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும். விரைவில் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்என்பதை இலங்கை அரசிடம் வலியுறுத்துவதற்காக ஐ.நா அரசியல் பிரிவு தலைவர் லின் பாஸ்கோ கொழும்பு வந்துள்ளார்.
ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவின் இணைச் செயலாளராக இருக்கிறார் பாஸ்கோ. நேற்று கொழும்பு வந்த அவர் 3 நாள் இங்கு பயணம் மேற்கொள்கிறார்.
முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை விரைவில் மறு குடியமர்த்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தமாறு இலங்கை அரசு அவர் வலியுறுத்தவுள்ளார்.
இதுகுறித்து இலங்கைக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், ஐ.நா. பொதுச் செயலாலரிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த மே மாதம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதை வலியுறுத்துவதற்காகவே தற்போது பாஸ்கோ கொழும்பு வந்துள்ளார்.
அரசியல் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக நடந்து வருவது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை இலங்கை அரசு மதிக்க வேண்டும். தனது கடமையிலிருந்து அது விலகக் கூடாது என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 80 சதவீத தமிழர்கள் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விடுவர் என பான் கி மூனுக்கு இலங்கை அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. ஆனால் அதுதொடர்பான நடவடிக்கைகள் மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications