புயல் சின்னம் வலுவிழந்தது-மழை தொடரும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பலவீனமடைந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் தென் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரமாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த மழை மேகங்கள் சூழ்ந்திருந்தன. அடுத்த 2 நாட்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

உள்புற தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு. அடுத்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் பொதுவாக லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் கன மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில், விடிய விடிய மழை பெய்தது.

மதுரையில் மாலை முதல் இரவு வரை லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

திண்டுக்கல் உள்ளிட்ட சில பகுதிகளிலும் லேசான மழை காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+