வங்கதேசத்தில் இந்து பக்தர் கொலை- 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தின் தகுர்காவன் மாவட்டத்தில் இந்துக்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜோகேஷ் சந்திர ராய், மோதிலால் ராய், ஜதீஷ் சந்திர பர்மன், ஹரேந்திரநாத் பர்மன், கிர்மோகன் பர்மன் ஆகிய ஐந்து பேரும் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்னொரு இந்துக் குழுவைச் சேர்ந்த புல்பாபு என்ற 20 வயது பக்தரை அடித்துக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கு இடையில் நடந்த மோதலில் 15 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications