ரவுடி காரில் மோதி கொலை- பஞ். தலைவர் உள்பட 15 பேர் கைது
சென்னை: சென்னை அருகே திருநின்றவூரில் ரவுடி ஒருவரைக் காரை மோதிக் கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 15 பேர் கைது செய்யபப்ட்டனர்.
திருநின்றவூர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் விஸ்வநாதன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அந்த பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ரவி.
பிரபல ரவுடி பார்த்திபன். இவரது தம்பி ஒரு அரசு கான்டிராக்டைப் பெறுவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதில் ரவிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 16ம் தேதி பஞ்சாயத்துக் கூட்டத்தை முடித்து விட்டு விஸ்வநாதன், ரவி மற்றும் சிலர் கார்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பார்த்திபன் தனது ஆட்களுடன் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இது மோதலாக மாறியது.
அப்போது ஒரு தரப்பு பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் இறங்கியது. இதையடுத்து விஸ்வநாதன், ரவி குழுவினர் கார்களில் ஏறித் தப்ப முயன்றனர். அப்போது பார்த்திபனை அவர்கள் காரை ஏற்றிக் கொன்று விட்டுத் தப்பினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடந்த பார்த்திபனை விட்டு விட்டு தப்பிச் சென்ற விஸ்வநாதன் குழுவினர், போலீஸில், தங்களை ரவுடிக் கும்பல் தாக்க வந்ததாக புகார் கொடுத்தனர்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கு பார்த்திபன் பிணமாகக் கிடந்ததைப் பார்த்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் விஸ்வநாதன் மற்றும் குழுவினர்தான் காரை ஏற்றி பார்த்திபனைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து விஸ்வநாதன் உள்ளிட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications