பிரபாகரன் உயிருடன் இருப்பது இந்தியா, இலங்கைக்குத் தெரியும் - சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
புதுக்கோட்டை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது நம்மை விட இந்தியா, இலங்கை அரசுகளுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீமான். அப்போது அவர் கூறுகையில், நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள். எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை சந்தித்து திரும்பிய பிறகு என்னிடம் நீ சந்தித்தது தவறு என்றார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். தன் மீது பல வழக்குகள் சுமந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அரசியல்வாதிகள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?

தமிழக ஆதரவும் கூட இன்றி போராடிய தமிழன் பிரபாகரன். அதனால்தான் இனி பிறக்கும் குழந்தையும் பிரபாகரன் பேரைச்சொல்லி பிறக்கும்.

தெருக்களில் உள்ள பிரபாகரன் படங்களை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் தமிழர் உள்ளங்களில் உள்ள பிரபாகரனை அகற்ற முடியாது.

பிரபாகரனை இனி சட்டைப்பையில் சின்னதாக குத்திக் கொள்ளுங்கள். பனியன்களாக அணிந்துகொள்ளுங்கள்.

பிரபாகரன் படங்களை ஏன் அரசியல்வாதிகள் அகற்றச் சொல்கிறார்கள். படம் பார்க்கவே இவர்களுக்கு பயம். இன்னும் பக்கத்தில் வந்து நின்றால் சொல்லவா வேண்டும்.

இன்று படத்தை இறக்கியவர்களே நாளை பிரபாகரன் படத்தை ஏற்றி பிடிப்பார்கள். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நம்மை விட இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்தான் தெரியும். அதனால்தான் பிரபாகரன் படங்களுக்கு தடை விதிக்கிறார்கள்.

இப்போதைய வீழ்ச்சி மகிழ்ச்சியே. மறுபடியும் பெருவோம் எழுச்சி.

அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12,500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.

உலகம் தடுக்கலாம்; ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.

உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.

என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.

எதிரிகளை எரிக்கும் நெருப்பாக வெகுண்டு எழுவோம். தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்.

கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப் பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப் போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள் என்றார் சீமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+