ஸ்டாலின் நிகழ்ச்சி-பட்டாசு வெடித்து 7 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் வெடிக்கப்பட்ட பட்டாசு, அங்கு கூடியிருந்த பெண்கள் பகுதியில் விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
சின்னசேலம் எம்எல்ஏ உதயசூரியன் இல்ல திருமண விழா நேற்று கள்ளக்குறிச்சி வடக்கனேந்தலில் நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அங்கிருந்து பன்ருட்டிக்கு கிளம்பினார். அவரது கார் மதியம் சுமார் 12.30 மணிக்கு தியாகதுருகம் பகுதிக்கு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராம மக்களும் அங்கு பெரும் திரளாக கூடியிருந்தனர். அப்போது அங்கு திமுகவை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்தனர். அதில் ஒன்று தாறுமாறாக வெடித்து சிதறி, பெண்கள் அதிகமிருக்கும் பகுதிக்குள் சென்று விழுந்தது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
இந்த சம்பவத்தில் குருபீடம் சுந்தரமூர்த்தி மனைவி அஞ்சலை (36), மணிப்பிள்ளை மனைவி சாரதா (30), தில்லைவனம் மனைவி மாசிலாமணி (50), அய்யாக்குட்டி மனைவி கடுச்சி (50), வேல்முருகன் மனைவி அலமேலு(22), முருகேசன் மனைவி தேவகி (50) மற்றும் வேளாக்குறிச்சியை சேர்ந்த ஜெயபால் (30) ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார பகுதியில் முதல் உதவி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் சாரதா என்பவரை தவிர்த்து மற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications