தமிழக மாவட்டங்களுக்கான ரேங்கிங் - மதுரைக்கு 23வது இடம் - அரசு அதிருப்தி

இங்கிலாந்து தூதரகத்தின் நிதியுதுவியுடன் நடத்தப்பட்டு வரும் நிதி மேலாண்மை மற்றும் ஆய்வுக் கழகம்தான் இந்த சர்வேயை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி பொருளாதார ஆளுமை இன்டெக்ஸ் - தமிழ்நாடு என்ற பெயரில் இதை வெளியிட அது திட்டமிட்டிருந்தது. ஆனால் அது பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
இந்த கழகத்தின் சர்வேயின்படி தமிழகத்திலேயே நம்பர் ஒன் மாவட்டமாக நீலகிரி தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது இடம் நாமக்கல்லுக்கும், 3வது இடம் கன்னியாகுமரிக்கும் தரப்பட்டுள்ளது.
கடைசி இடத்தில் திண்டுக்கல் உள்ளது. சென்னை ஏற்கனவே தொழில் மையமாக இருப்பதால் இந்த ஆய்விலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டது.
அரியலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகியவை அவற்றின் தாய் மாவட்டங்களான பெரம்பலூர், கோவை, தர்மபுரியுடன் இணைத்து கணக்கிடப்பட்டுள்ளன.
மதுரைக்கு 23வது இடமாம்...
இந்த அறிக்கையில், மதுரைக்கு 23வது இடம் கொடுத்துள்ளனர். அதேசமயம் ராமநாதபுரத்திற்கு 22வது இடத்தைக் கொடுத்துள்ளனர். அதாவது மதுரையை விட ராமநாதபுரத்தில் வாழ்நிலையும், வர்த்தக சூழ்நிலையும் சிறப்பாக உள்ளதாம்.
திருச்சி 16வது இடத்திலும், திருநெல்வேலி 17வது இடத்திலும் உள்ளன.
மத்திய ரசாயானத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காகவே மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது.
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல தகவல்கள் தமிழக அரசால் கொடுக்கப்பட்டவைதான். இருப்பினும் இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறை மற்றும் கணக்கீடுகளுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் கூறுகையில், இந்த ஆய்வில் உள்ள பல முறைகள் தவறானவயாக உள்ளன. மதுரையை விட எப்படி ராமநாதபுரம் சிறந்த வர்த்தக சூழ்நிலையைக் கொண்டதாக இருக்க முடியும்? இந்த ஆய்வை மாணவர்கள் நடத்தியிருப்பதாக நான் அறிகிறேன் என்றார்.
ஆனால் உரிய நிபுணர்களைக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கழகத்தின் திட்டத் தலைவர் சோமசுந்தரம் கூறுகிறார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications