உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக போட்டி
சென்னை: சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள
3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 54 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுக்களை திரும்பப் பெற வரும் 23ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்தது போல பதுங்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது.
அதற்கேற்ப அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இந்த விஷயத்தில் ஆழ்ந்த அமைதி காத்து வந்தார்.
இந் நிலையில் இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் புறக்கணிப்பு:
ஆனால், புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ராஜ்யசபா தேர்தலை காங்கிரஸ் வியாபாரமாக்கிவிட்டதால் தேர்தலை புறக்கணிப்பதாக அம்மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications